இணையதள செய்திகளுக்கு நல்ல கருத்துக்களை பதிவிடும் வாசகர்களில் ஒருவரை தேர்வு செய்து, அவரது கருத்து, தினமலர் இணையதள முதல் பக்கத்தில் தினமும் சேர்க்கப்படுகிறது. இதில், உங்கள் கருத்தும் இடம்பெற, உங்களது உண்மையான பெயர், ஊர், நாடு, இமெயில் விலாசத்துடன் கருத்துகளை பதிவிடுமாறு வேண்டுகிறோம்.தினமலர் இணையதளத்தில் ''அதிக விலை கொடுக்கப் போகிறோம்: ராகுல் எச்சரிக்கை'' என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டோம்.
இந்த செய்திக்கு Cuddalore ஐ சேர்ந்த N.Purushothaman என்பவர் எழுதிய கருத்து:
இத்தாலி நாட்டில் வைரஸ் பாதித்த முதியோர்களை கைவிடும் நிலைக்கு சென்று விட்டது அந்நாட்டு அரசு.... வைரஸ் பாதித்த இளைய தலைமுறையினருக்கு மட்டும் தொடர் சிகிச்சை அளிக்கப்படுகிறது.... ஆனால் இந்தியாவிலோ எய்ட்ஸ் மற்றும் பன்றி காய்ச்சலுக்கு கொடுக்கப்படும் மருந்தை கலந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுத்து அதில் வெற்றியும் கண்டுள்ளனர்... இந்திய மருத்துவ கவுன்சில் அதற்கு அந்த சிகிச்சை முறைக்கு அங்கீகாரம் கொடுத்ததோடு நில்லாமல் உலக சுகாதார நிறுவனத்திற்கும் அந்த சிகிச்சை முறையை தெரியப்படுத்தி உள்ளது....
உலக சுகாதார நிறுவனம் அந்த சிகிச்சை முறையை அங்கீகரித்தால் உலகெங்கிலும் இந்த வைரஸ் பாதிப்பிற்கு உள்ளான மூத்த குடிமக்களுக்கு இந்த சிகிச்சை அளிக்க வாய்ப்பு ஏற்படும் ....தற்போது எடுக்கப்பட்டு வரும் முன் எச்சரிக்கை மற்றும் அனைத்து நடவடிக்கைகளையும் டில்லி நீதிமன்றம், உலக சுகாதார நிறுவனங்கள் பாராட்டி வரும் நிலையில் ராகுலின் பொறுப்பற்ற கருத்தை தேசபக்தி கொண்ட இந்தியர்கள் புறக்கணிப்பார்கள்.... ராகுலுக்கு உள்ளது அதிகாரப்பசி. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
ராகுலுக்கு உள்ளது அதிகாரப்பசி