இந்த வழக்கில், முகேஷ் குமார் சிங், 32, வினய் சர்மா, 26, பவன் குப்தா, 25, அக்ஷய் குமார் சிங், 31, ஆகிய நான்கு பேருக்கும் துாக்கு தண்டனை விதிக்கப்பட்டது.மூன்று முறை, துாக்கு தண்டனைக்கான தேதி ஒத்திவைக்கப்பட்ட நிலையில், நாளை அவர்களுக்கு தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது.
இந்நிலையில், டில்லி விசாரணை நீதிமன்றத்தில், குற்றவாளி முகேஷ் குமார் சிங், நேற்று முன்தினம், ஒரு மனுவை தாக்கல் செய்தார். அதில்,'பலாத்காரம் நடந்த, 2012, டிசம்பர், 16ம் தேதி, நான் டில்லியிலேயே இல்லை.'ஆகையால், எனக்கு விதிக்கப்பட்ட துாக்கு தண்டனை உத்தரவை ரத்து செய்யவேண்டும்' என, குறிப்பிட்டிருந்தார். நீதிமன்றம், அம்மனுவை தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, டில்லி உயர் நீதிமன்றத்தில், நேற்று முகேஷ் மேல்முறையீடு செய்தார்.இதில், டில்லி அரசு மற்றும் முகேஷ் தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, பிரிஜேஷ் சேதி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
'விதவையாக விரும்பவில்லை''நிர்பயா' வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான அக்ஷய் குமார் சிங்கின் மனைவி, புனிதா தேவி, தனக்கு விவாகரத்து வழங்கக்கோரி, பீஹாரில், குடும்ப நல நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார். அவர் தாக்கல் செய்த மனுவில், 'என் கணவருக்கு தண்டனை வழங்கப்பட்ட பின், கற்பழித்தவரின் விதவை என்ற பெயரில், என்னால் வாழ முடியாது. ஆகையால், எனக்கு விவாகரத்து வழங்குங்கள்' என கோரியுள்ளார். இந்நிலையில், இந்த மனு, இன்று விசாரணைக்கு வர உள்ளது.
நிர்பயா வழக்கு: முகேஷ்சிங் மனு தள்ளுபடி