அடிமாட்டுக்காக கடத்தப்பட்டு, 'புளூ கிராஸ்' அமைப்பால் மீட்கப்படும் மாடுகள்

மாதம், 8 லட்சம் ரூபாய் வரை, பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்கிறோம். மருத்துவச் செலவுக்கு, 35 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது. மற்றபடி உணவு உள்ளிட்ட அனைத்துக்கும் சேர்த்து, ஒவ்வொரு மாதமும், 16 லட்சம் ரூபாய் வரைசெலவாகிறது.


ஒவ்வொரு மாதமும், கஷ்டமாகத் தான் உள்ளது. ஆனால், காஞ்சி மகா பெரியவர், என்னை மாடு வளர்க்கச் சொன்ன போது, 'டாக்டரான நான், வேலையை விட்டு விட்டால், நான் எப்படி செலவு செய்வது?' எனக் கேட்டேன். அவர், 'தாகம் ஏற்படும் போது, தண்ணீர் கிடைத்தே தீரும்' என்றார். அதன்படியே, இதுவரை, பசுக்களைப்பராமரிக்கத் தேவையான நிதியை, ஆர்வலர்கள் வழங்கிவருகின்றனர்.


தினமும், தவிடு, பொட்டு, புல், வைக்கோல், வைட்டமின் சத்துக்கள் வழங்கி வருகிறோம். மாடுகளை, தினமும் குளிப்பாட்டி, தேவையான பராமரிப்புகளை செய்கிறோம்.அத்துடன், கால்கள், வால்கள் வெட்டப்பட்ட நிலையில், சாலையில் கிடக்கும் மாடுகள், கைவிடப்பட்ட காளைகள், எருமைகள், அடிமாட்டுக்காக கடத்தப்பட்டு, 'புளூ கிராஸ்' அமைப்பால் மீட்கப்படும் மாடுகள், தீ விபத்தால் பாதிக்கப்படுபவை என, பலவிதமான பாதிப்புகளுடன், கால்நடைகள் இங்கு வருகின்றன.