உலகில் உள்ள விமான நிலையங்களில், மிக தாழ்வான இடத்தில் அமைந்துள்ள விமான நிலையம் இஸ்ரேலில் உள்ளது. 'பார் யஹூடா' என்ற இந்த விமான நிலையம், அங்குள்ள ஜூடியான் பாலைவனப் பகுதியில் 1963ல் தொடங்கப்பட்டது. இது இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேமில் இருந்து 100 கி.மீ., தொலைவில் உள்ளது. இது கடல் மட்டத்தில் இருந்து 1,240 அடி ஆழத்தில் அமைந்துள்ளது. இந்த விமான நிலைய ஓடுதளத்தின் நீளம் 3,937 அடி. 'சாக்கடலின்' மேற்குப்பகுதியில் இந்த விமான நிலையம் உள்ளது. இது மாற்று விமானநிலையமாக பயன்படுத்தப்படுகிறது.
அறிவியல் ஆயிரம் : செவ்வாய்க்கு மனிதர்கள்